பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதியில்3½ லட்சம் மீன் குஞ்சுகள் விடப்பட்டன


பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதியில்3½ லட்சம் மீன் குஞ்சுகள் விடப்பட்டன
x

பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதியில் 3½ லட்சம் மீன் குஞ்சுகள் வளா்ப்புக்காக விடப்பட்டன

ஈரோடு

பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதியில் குறித்த காலத்துக்கு ஒருமுறை மீன் குஞ்சுகள் விடப்படுவது வழக்கம். அதன்படி பவானிசாகர் அணை நீர் தேக்க பகுதியில் மீன் குஞ்சுகள் விடப்பட்டன. ஆழியார் அணை மீன் வளர்ச்சி கழக மேலாளர் சுகுமார், மதுரை மாவட்ட மீன் வளர்ச்சி கழக மேலாளர் தமிழ்மாறன், பவானிசாகர் துணை மேலாளர் ராஜன், மீன்வளத்துறை துணை இயக்குனர் தில்லை ராஜன், உதவி இயக்குனர் கதிரேசன் ஆகியோர் முன்னிலையில் பவானிசாகர் அணை நீர் தேக்கத்தில் லோகு இன மீன்குஞ்சுகள் 2 லட்சத்து 44 ஆயிரத்து 780-ம், மிர்கால் இன மீன்குஞ்சுகள் ஒரு லட்சத்து 320-ம் என மொத்தம் 3 லட்சத்து 45 ஆயிரத்து 100 மீன் குஞ்சுகள் விடப்பட்டன.

மொத்தம் இந்த சீசனில் 3 லட்சத்து 28 லட்சம் மீன் குஞ்சுகள் விட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் தற்போது இலக்கை விட கூடுதலாக மீன் குஞ்சுகள் விடப்பட்டுள்ளதாக மீன் வளர்ச்சி கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அப்போது பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள பங்கு மீனவர்கள், மீன்பிடி ஒப்பந்ததார நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


Next Story