ரூ.4½ லட்சத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட பூமிபூஜை


ரூ.4½ லட்சத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட பூமிபூஜை
x

ரூ.4½ லட்சத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட பூமிபூஜை நடைபெற்றது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் நகராட்சி 24-வது வார்டு, அப்பாய் தெருவில் குடிநீர் பிரச்சினை உள்ளதால் அப்பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டித்தர பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் ரூ.4½ லட்சம் செலவில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கு பூமி பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகராட்சி கவுன்சிலர் தி.மு.சுதாகர் தலைமை தாங்கி, அனைவரையும் வரவேற்றார்.

நகராட்சி தலைவர் சங்கீதா வெங்கடேஷ், நகராட்சி ஆணையாளர் ஜெயராமராஜா, நகராட்சி பொறியாளர் உமா மகேஸ்வரி ஆகியோர் பூமி பூஜை போட்டு, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணியை தொடங்கிவைத்தனர். நிகழ்ச்சியில் நகராட்சி கவுன்சிலர் சரவணன் உள்பட, பொதுமக்கள்பலர் கலந்து கொண்டனர். முடிவில் பணி மேற்பார்வையாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.


Next Story