சிறுபாலம், சிமெண்டு சாலை பணிக்கு பூமி பூஜை


சிறுபாலம், சிமெண்டு சாலை பணிக்கு பூமி பூஜை
x

சிறுபாலம், சிமெண்டு சாலை பணிக்கு பூமி பூஜை நடந்தது.

ராணிப்பேட்டை

சிறுபாலம், சிமெண்டு சாலை பணிக்கு பூமி பூஜை நடந்தது.

நெமிலி ஒன்றியம், திருமால்பூர் கிராமம் அங்காளம்மன் கோவில் மற்றும் இருளர் சமூகத்தினர் வசிக்கும் பகுதிக்கு செல்லும் வழியில் உள்ள சிறுபாலம் கடந்த ஆண்டு பெய்த கனமழையின் போது இடிந்து விழுந்தது. இதனை தொடர்ந்து இடிந்த பழைய சிறுபாலத்தினை அப்புறப்படுத்திவிட்டு, அதே இடத்தில் புதிதாக சிறுபாலம் கட்டித்தர வேண்டுமென கிராம பொதுமக்களும், இருளர் இன மக்களும் கோரிக்கை வைத்தனர்.

இதனை தொடர்ந்து நெமிலி ஊராட்சி ஒன்றிய நிதியிலிருந்து ரூ.20 லட்சம் ஒதுக்கப்பட்டு சிறுபாலம் மற்றும் சிமெண்டு சாலை அமைக்கும் பணிக்கு பூமிபூஜை நடைபெற்றது. நெமிலி ஒன்றிய குழு தலைவர் பெ.வடிவேலு தலைமை தாங்கி, பூமி பூஜை செய்து‌ அடிக்கல் நாட்டினார்.

விழாவில் ஒன்றிய குழு துணைத் தலைவர் ச.தீனதயாளன், ஒன்றிய குழு உறுப்பினர் சுகுமார், ஊராட்சி மன்றத் தலைவர் துலுக்காணம், துணைத் தலைவர் பாஸ்கரன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story