முதல்-அமைச்சர் வரும் நிகழ்ச்சிக்காக பந்தல் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை


முதல்-அமைச்சர் வரும் நிகழ்ச்சிக்காக பந்தல் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை
x

ராணிப்பேட்டைக்கு முதல்-அமைச்சர் வரும் நிகழ்ச்சிக்காக பந்தல் அமைக்கும் பணிக்கு பூமி பூஜையை அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை

வேலூர் மாவட்டத்தில் இருந்து ராணிப்பேட்டை மாவட்டம் தனியாக பிரிக்கப்பட்டதையடுத்து அங்கு பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கலெக்டர் அலுவலகம் கட்டப்பட்டுள்ளது.

இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 20-ந்தேதி திறந்து வைக்கிறார். இதற்கான அரசு விழா நிகழ்ச்சி ராணிப்பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெறுகிறது. இதனையொட்டி விழா பந்தல் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது.

இதில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சரும், ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க. செயலாளருமான காந்தி கலந்து கொண்டு பூமி பூஜையிட்டு பந்தக்கால் நட்டார்.

நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் சங்கரலிங்கம், உதவி கலெக்டர் பூங்கொடி, உதவி செயற் பொறியாளர் திரிபுரசுந்தரி, வாலாஜா தாசில்தார் ஆனந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story