அரசு பள்ளியில் புதிய வகுப்பறைகள் கட்ட பூமி பூஜை
பண்ணதெரு ஊராட்சியில் அரசு பள்ளியில் புதிய வகுப்பறைகள் கட்ட பூமி பூஜை நடந்தது.
நாகப்பட்டினம்
வாய்மேடு:
தலைஞாயிறு ஒன்றியம் பன்னதெரு ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.26 லட்சத்தில் இரண்டு வகுப்பறைகள் கட்டுவதற்கு பூமி பூஜை நடை பெற்றது.நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் ரத்தினகுமார் தலைமை தாங்கினார். தலைஞாயிறு தி.மு.க. ஒன்றிய செயலாளர் மகாகுமார் கலந்து கொண்டு புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.இந்த நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு தலைவர் தமிழரசி, ஒன்றிய குழு உறுப்பினர் ரம்யா, ஒன்றிய ஆணையர்கள் ஜெபஸ்டி அம்மாள், அண்ணாதுரை ஒன்றிய பொறியாளர் சுகுமாரன் உள்ளிட்ட பொதுமக்கள் பலர் கலந்துக்கொண்டனர்.
Related Tags :
Next Story