புதிய ஊராட்சி மன்ற கட்டிடம் கட்ட பூமி பூஜை
புதிய ஊராட்சி மன்ற கட்டிடம் கட்ட பூமி பூஜை நடந்தது.
நாகப்பட்டினம்
சிக்கல்:
கீழ்வேளூர் ஒன்றியம் ஒக்கூர் ஊராட்சியில் கடந்த ஆகஸ்டு 15-ந்தேதி கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமையில் நடந்த கிராம கூட்டத்தில் புதிய ஊராட்சி மன்ற கட்டிடம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர். இதை தொடர்ந்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.23 லட்சம் மதிப்பீட்டில் ஒக்கூர் ஊராட்சி பெரியார் சிலை அருகே புதிய ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடந்தத. இதில் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலா ரமேஷ், துணைத் தலைவர் தேவிகா கோசிமணி, ஊராட்சி செயலாளர் சங்கீதா, வார்டு உறுப்பினர்கள், அனைத்து கட்சி பொறுப்பாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்
Related Tags :
Next Story