நெல்கொள்முதல் நிலையம் அமைக்க பூமி பூஜை


நெல்கொள்முதல் நிலையம் அமைக்க பூமி பூஜை
x

நெல்கொள்முதல் நிலையம் அமைக்க பூமி பூஜை

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

திருமருகல் ஒன்றியம் கீழப்பூதனூர் ஊராட்சியில் பெருநாட்டான்தோப்பில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறந்தவெளியில் தாழ்வான இடத்தில் செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் புதிய அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கும் பணிக்கு பூமிபூஜை நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) பாத்திமா ஆரோக்கியமேரி முன்னிலை வகித்து, அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய பொறியாளர் சுரேஷ் மற்றும் ஊராட்சி மன்ற துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story