நெல் கொள்முதல் நிலையம் அமைக்க பூமிபூஜை
வண்டுவாஞ்சேரி ஊராட்சியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க பூமிபூஜை நடந்தது.
நாகப்பட்டினம்
வாய்மேடு:
வண்டுவாஞ்சேரி ஊராட்சியில் நெல் கொள்முதல் நிலையம் தற்காலிக கட்டிடத்தில் இயங்கி வந்தது. இதற்கு நிரந்தர கட்டிடம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று கலெக்டர் அருண் தம்புராஜ். மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு திட்டத்தில் ரூ.28 லட்சத்தில், நெல் கொள்முதல் நிலைய கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கி அனுமதி வழங்கினார். இதையடுத்து வண்டுவாஞ்சேரியில் நெல் கொள்முதல் நிலைய கட்டிடம் கட்ட பூமி பூஜை நடந்தது. நிகழ்ச்சி்க்கு ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்செல்வி குமார் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர்கள் வைத்தியநாதன், கோமதி தனபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஒன்றிய மேற்பார்வையாளர் சுப்பிரமணியன், ஊராட்சி செயலாளர் குமரவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story