பூம்புகார் சுனாமி குடியிருப்பை சூழ்ந்த மழைநீரை அகற்றும் பணி
பூம்புகார் சுனாமி குடியிருப்பை சூழ்ந்த மழைநீரை அகற்றும் பணி தாசில்தார் பார்வையிட்டார்
திருவெண்காடு:
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் மீனவர் சுனாமி குடியிருப்பு பகுதியில் 500-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றனர். நேற்றுமுன்தினம் இரவு முதல் தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக சுனாமி குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்தது. இதன் காரணமாக நேற்று மீனவர்கள் தங்கள் குடியிருப்பில் இருந்து வெளியே வருவதற்கு மிகவும் சிரமப்பட்டனர். தகவல் அறிந்த சீர்காழி தாசில்தார் செந்தில்குமார், காவிரி பூம்பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் சசிகுமார் ஆகியோர் சுனாமி குடியிருப்பு பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டனர். அதனை தொடர்ந்து ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் பொக்்லின் எந்திரங்கள் மூலம் சுனாமி குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்துள்ள மழை நீரை அகற்றும் பணி நடந்தது. அப்போது அவருடன் கிராம நிர்வாக அதிகாரிகள் ராதாகிருஷ்ணன், ராஜாமணி மற்றும் கிராம பொறுப்பாளர்கள் உடனிருந்தனர்.