கங்கை மோட்டூர் தொடக்கப்பள்ளியில் வகுப்பறை கட்டிடம் கட்ட பூமி பூஜை
கங்கை மோட்டூர் தொடக்கப்பள்ளியில் வகுப்பறை கட்டிடம் கட்ட பூமி பூஜை நடைபெற்றது.
சோளிங்கர்
கங்கை மோட்டூர் தொடக்கப்பள்ளியில் வகுப்பறை கட்டிடம் கட்ட பூமி பூஜை நடைபெற்றது.
சோளிங்கரை அடுத்த கங்கை மோட்டூர் கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் ரூ.30 லட்சத்து 38 ஆயிரம் மதிப்பீட்டில் 2 வகுப்பறைகள் கட்ட பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. சோளிங்கர் தி.மு.க.கிழக்கு ஒன்றிய செயலாளர் சந்திரன் தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. மத்திய ஒன்றிய செயலாளர் பூர்ணசந்தர் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய பொருளாளர் பழனி, தி.மு.க.மாணவர் அணி அமைப்பாளர் கோகுல் ராவ், மாணவரணி துணை அமைப்பாளர் சவுந்தர், சுற்றுச்சூழல் அமைப்பாளர் மோகன்குமார், கிளை செயலாளர் தண்டபாணி, டெல்லி பிரதிநிதி ஏழுமலை, நிர்வாகிகள் தாளிக்கால் விஜயகுமார், மோகன், திருவேங்கடம், கணேசன், விஜயகுமார் கரிக்கல் பாபு, மேத்தவாடி வேணுகோபால், தர்மலிங்கம் உள்பட ஊர் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.