தார்சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை


தார்சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை
x

வாணியம்பாடியில் தார்சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது.

திருப்பத்தூர்

வாணியம்பாடி நகராட்சிக்கு உட்பட்ட 1-வது வார்டில் உள்ள பெரியபேட்டை முதல் கொடையாஞ்சி கிராம எல்லையை இணைக்கும் வரை ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைப்பதற்கு பூமி பூஜை போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நகர கூட்டுறவு வங்கி தலைவரும், நகர தி.மு.க. செயலாளருமான வி.எஸ்.சாரதிகுமார் முன்னிலை வகித்தார். வாணியம்பாடி நகரமன்ற தலைவர் உமா சிவாஜிகணேசன் தலைமை தாங்கி, தார் சாலை அமைக்கும் பணியை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் நகராட்சி அதிகாரிகள், மாவட்ட பிரதிநிதிகள் சுந்தர், ரவி, கிளை செயலாளர் சரவணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story