ரூ.6 லட்சத்தில் சிமெண்டு சாலை அமைக்க பூமி பூஜை


ரூ.6 லட்சத்தில் சிமெண்டு சாலை அமைக்க பூமி பூஜை
x
தினத்தந்தி 9 July 2023 11:57 PM IST (Updated: 10 July 2023 2:32 PM IST)
t-max-icont-min-icon

துத்திப்பட்டு ஊராட்சியில் ரூ.6 லட்சத்தில் சிமெண்டு சாலை அமைக்க பூமி பூஜை நடைபெற்றது.

திருப்பத்தூர்

ஆம்பூர் அருகே உள்ள துத்திப்பட்டு ஊராட்சி புதுமனை பகுதியில் சிமெண்டு சாலை அமைத்து தரவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையெடுத்து ஒன்றிய பொதுநிதியில் இருந்து சிமெண்டு சாலை அமைக்க ரூ.6 லட்சத்து 30 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு சிமெண்டு சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நடந்தது.

ஊராட்சிமன்ற தலைவர் சுவிதா கணேஷ், ஒன்றியக்குழு உறுப்பினர் திருக்குமரன் ஆகியோர் பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தனர். இதில் ஊராட்சிமன்ற துணைத்தலைவர் விஜய், ஊராட்சி உறுப்பினர் அண்ணாதுரை, சந்திரகாசன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story