ரூ.4¼ கோடியில் தார்சாலை அமைக்க பூமி பூஜை
நல்லம்பள்ளி அருகே ரூ.4¼ கோடியில் தார்சாலை அமைக்க பூமி பூஜையை வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ. பணியை தொடங்கி வைத்தார்.
தர்மபுரி
நல்லம்பள்ளி:
நல்லம்பள்ளி அருகே கெங்கலாபுரம் சந்திப்பு சாலை முதல் சாமிசெட்டிப்பட்டி வரை ரூ.4 கோடியே 36 லட்சம் மதிப்பில் தார்சாலை அமைக்க பூமி பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு உதவி கோட்ட பொறியாளர் ஜெய்சங்கர், உதவி பொறியாளர் கிருபாகரன் ஆகியோர் தலைமை தாங்கினர். வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். இதில் பா.ம.க. மாவட்ட அமைப்பு செயலாளர் சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர் பெரியசாமி, ஒன்றிய கவுன்சிலர்கள் காமராஜ், பழனியம்மாள், வளர்மதி, பா.ம.க. ஒன்றிய செயலாளர்கள் அறிவு, சிவப்பிரகாசம், ஒன்றிய துணை செயலாளர் தவமணி மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story