ரூ.4¾ கோடியில் ஒன்றிய அலுவலக கட்டிடம்
ரூ.4¾ கோடியில் ஒன்றிய அலுவலக கட்டிடம் பணிக்கான பூமிபூஜை நிகழ்ச்சி நடந்தது.
திருப்பத்தூர்,
திருப்பத்தூரில் தற்போது இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு பின்புறம் உள்ள மைதானத்தில் நவீன வசதிகளுடன் கூடிய ஊராட்சி ஒன்றிய புதிய அலுவலக கட்டிடம் ரூ.4.73 கோடி மதிப்பீட்டில் கட்டுவதற்கான பூமிபூஜை நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் மதுசூதனரெட்டி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கலந்துகொண்டு பூமிபூஜை செய்து அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் பேசுகையில், தமிழகம் முழுவதும் 60-க்கும் மேற்பட்ட புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டுவதற்கு ரூ.280 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் வருகின்ற நிதியாண்டில் சாக்கோட்டை, எஸ்.புதூர், சிவகங்கை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கும் புதிய கட்டிடப்பணி மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும் ஊராட்சிக்கு ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி செயலகம் அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதவிர 27 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சிமன்ற அலுவலக கட்டிடமும், 388 ஊராட்சி ஒன்றிய தலைவர்களுக்கு வாகன வசதிகள் வழங்கிடவும், 110 விதியின் கீழ் ரூ.800 கோடி மதிப்பீட்டில் பயனில்லா பள்ளிக்கட்டிடங்கள் இடிக்கப்பட்டு புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது என்றார்.
நிகழ்ச்சியில், திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சண்முகவடிவேலு, மாவட்ட துணை செயலாளர் சேங்கைமாறன், மாநில பொதுக்குழு உறுப்பினர் பள்ளத்தூர் ரவி, துணை தலைவர் மீனாள், ஒன்றிய செயலாளர்கள் குன்றக்குடி சுப்பிரமணியன், விராமதி மாணிக்கம், தி.மு.க. மாவட்ட மகளிரணி பவானிகணேசன், பேரூராட்சி தலைவர் கோகிலாராணிநாராயணன், பொசலான், ஊராட்சி மன்ற கூட்டமைப்பு தலைவர் மாணிக்கவாசகம், திட்ட இயக்குனர் சிவராமன் ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் வெண்ணிலா, வட்டாட்சியர்கள் வெங்கடேசன்(திருப்பத்தூர்), சாந்தி (சிங்கம்புணரி), வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜயகுமார், தென்னரசு மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.