சிமெண்டு சாலை அமைக்க பூமி பூஜை


சிமெண்டு சாலை அமைக்க பூமி பூஜை
x

அரூர் அருகே சிமெண்டு சாலை அமைக்க பூமி பூஜை நடைபெற்றது.

தர்மபுரி

அரூர்

அரூர் அருகே உள்ள கீரைப்பட்டி, வள்ளிமதுரையில் அரூர் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.6.45 லட்சம் மதிப்பில் சிமெண்டு சாலை அமைக்க பூமி பூஜை நடந்தது. சம்பத்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். இதில் ஒன்றிய செயலாளர் பசுபதி, மாவட்ட துணை தலைவர் செண்பகம் சந்தோஷ், ஊராட்சி மன்ற தலைவர் அமுதா சங்கர், மாநில பொது குழு உறுப்பினர் கீரைசம்பத், கூட்டுறவு சங்கத்தலைவர் சிவன், நிர்வாகிகள் சின்னசாமி, மணி, அன்பழகன், கோவிந்தராஜ், முருகன், சிவலிங்கம், குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story