மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட பூமிபூஜை
பி.என்.பட்டி பேரூராட்சியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட சதாசிவம் எம்.எல்.ஏ. பூமிபூஜை தொடங்கி வைத்தார்.
சேலம்
மேட்டூர்
பி.என்.பட்டி பேரூராட்சி 15-வது வார்டு தொட்டில்பட்டி பகுதியில் ரூ.15 லட்சத்தில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட உள்ளது. இதற்கான பூமிபூஜை நடந்தது. இதில் மேட்டூர் எம்.எல்.ஏ. சதாசிவம் கலந்து கொண்டு, பூமிபூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். இதில் பேரூராட்சி தலைவர் பொன்னுவேல், கவுன்சிலர்கள் மயில்சாமி, திருமுருகன், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன், பேரூர் பா.ம.க. செயலாளர் லூதீன்குமார், மேட்டூர் அனல் மின் நிலைய தொழிற்சங்க செயலாளர் மாரியப்பன் மற்றும் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story