முத்துநாயக்கன்பட்டி அருகேரூ.1.90 கோடியில் தார்சாலை அமைக்க பூமிபூஜைஎம்.எல்.ஏ.க்கள் வக்கீல் ராஜேந்திரன், அருள் தொடங்கி வைத்தனர்


முத்துநாயக்கன்பட்டி அருகேரூ.1.90 கோடியில் தார்சாலை அமைக்க பூமிபூஜைஎம்.எல்.ஏ.க்கள் வக்கீல் ராஜேந்திரன், அருள் தொடங்கி வைத்தனர்
x
சேலம்

ஓமலூர்

ஓமலூர் அடுத்த முத்துநாயக்கன்பட்டி- சூரமங்கலம் சாலையில் இருந்து மல்லகவுண்டனூர், சடைமாரியம்மன் கோவில் வழியாக செல்லும் சாலையில் கிராம சாலைகள் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ரூ.1.90 கோடியில் சாலை அமைக்கும் பணிக்கான பூமிபூஜை மல்லகவுண்டனூர் பிள்ளையார் கோவில் பஸ் நிறுத்தம் அருகே நடைபெற்றது. ஓமலூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ரமேஷ் தலைமை தாங்கினார். ஓமலூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் செல்வகுமாரன் முன்னிலை வகித்தார். சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., சேலம் மேற்கு தொகுதி அருள் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு பூமிபூஜை செய்து பணியை தொடங்கி வைத்தனர். இதில் மாவட்ட துணை செயலாளர் திருநாவுக்கரசு, கன்னங்குறிச்சி பேரூராட்சி தலைவர் குபேந்திரன், மாவட்ட கவுன்சிலர் அழகிரி, ஓமலூர் நகர செயலாளர் ரவிச்சந்திரன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் புகழேந்திரன், மாவட்ட பிரதிநிதி தங்கதுரை, முன்னாள் தலைவர் வேலாயுதம், ஒன்றிய துணை செயலாளர் ஜெகன், காமலாபுரம் ரமேஷ், நகர துணை செயலாளர் லியாகத் அலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story