ரேஷன் கடை கட்டுவதற்கான பூமிபூஜை


ரேஷன் கடை கட்டுவதற்கான பூமிபூஜை
x

ரேஷன் கடை கட்டுவதற்கான பூமிபூஜையை தேவராஜி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை நகராட்சி 10-வது வார்டு ஊசிநாட்டான் வட்டம் பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள பொதுமக்கள் ரேஷன் பொருட்களை வாங்க அருகில் உள்ள சந்தைக்கோடியூர் பகுதிக்கு சென்று வருகின்றனர். இதனால் தங்கள் பகுதியில் ரேஷன் கடை அமைக்க வேண்டும் என எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்திருந்தனர். ரேஷன் கடை கட்ட அரசுக்கு சொந்தமான இடம் இல்லாததால் நகர செயலாளர் ம.அன்பழகன் தனது சொந்த செலவில் இடத்தை வாங்கி இலவசமாக வழங்கினார்.

இதனையடுத்து அப்பகுதி மக்களுக்கு புதிய ரேஷன் கடை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் ம.அன்பழகன் தலைமை தாங்கினார். நகர மன்ற உறுப்பினர் ரா.சிவக்குமார், வார்டு செயலாளர் ஆர்.சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும், ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. க.தேவராஜி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ரேஷன் கடை கட்டுவதற்கான பூமி பூஜை செய்து, பணியை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் மா.காவியாவிக்டர், துணைத் தலைவர் பெ.இந்திரா பெரியார்தாசன், நகராட்சி ஆணையர் பழனி, மாவட்ட பிரதிநிதிகள் பு.பாஸ்கர், க.சம்பத், நகர பொருளாளர் த.இனியன் உள்ளிட்ட நகர மன்ற உறுப்பினர்கள், தி.மு.க. நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story