ரூ.3 கோடியே 75 லட்சத்தில் சாலை அமைக்கும் பணிக்கான பூமிபூஜை
ரூ.3 கோடியே 75 லட்சத்தில் சாலை அமைக்கும் பணிக்கான பூமிபூஜை
நாகப்பட்டினம்
திருமருகல் ஒன்றியம் மானாம்பேட்டை-போலகம் வரை உள்ள ஆற்றங்கரையில் சேதமடைந்துள்ள சாலைகளை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். கோரிக்கையை ஏற்று மானாம்பேட்டை-போலகம் இடையே 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்கும் பணிக்காக பூமிபூஜை தொடங்கியது. நிகழ்ச்சிக்கு திருமருகல் தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வ செங்குட்டுவன் தலைமை தாங்கினார். பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.3 கோடியே 75 லட்சத்து 33 ஆயிரம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் இந்த பணியை தி.மு.க. நாகை மாவட்ட செயலாளரும், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவருமான கவுதமன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய ஆணையர் பாலமுருகன், ஊராட்சி மன்ற தலைவர் சந்திரகலா கிருஷ்ணமூர்த்தி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story