ரூ.1½ கோடியில் 39 கடைகள் கட்ட பூமி பூஜை


ரூ.1½ கோடியில் 39 கடைகள் கட்ட பூமி பூஜை
x

சோளிங்கர் மார்க்கெட் பகுதியில் ரூ.1½ கோடியில் 39 கடைகள் கட்ட பூமி பூஜை நடந்தது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சி பஜார் பகுதியில் தினசரி மார்க்கெட்டில் ரூ.1 கோடியே 64 லட்சம் மதிப்பில் 39 கடைகள் கட்டும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது. நகராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையர் பிரீத்தி முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, ஜெகத்ரட்சகன் எம்.பி., கலெக்டர் வளர்மதி ஆகியோர் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார்கள்.

தொடர்ந்து அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் எம்.பி., எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.35 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 2 வகுப்பறைகளை திறந்து வைத்தனர்.

நிகழ்ச்சியில் தி.மு.க. மாவட்ட துணைச் செயலாளர் சிவானந்தம், தலைமை செயற்குழு உறுப்பினர் அசோகன், நகர செயலாளர் கோபி, நகராட்சி துணைத்தலைவர் பழனி, ஒன்றியக்குழு தலைவர் கலைக்குமார், நகராட்சி துப்புரவு ஆய்வாளர் வடிவேல், முன்னாள் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வம், நகராட்சி உறுப்பினர் அருண்ஆதி, காங்கிரஸ் ஒன்றிய தலைவர் உதயகுமார், தாசில்தார் ஆனந்தன், வருவாய் ஆய்வாளர் தமிழரசி, கிராம நிர்வாக அலுவலர் ராஜகோபால் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story