புதிய ரேஷன் கடை கட்ட பூமி பூஜை
புதிய ரேஷன் கடை கட்ட பூமி பூஜை நடைபெற்றது.
விருதுநகர்
சிவகாசி,
சிவகாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாநகராட்சியின் 27-வது வார்டு பகுதியில் புதிய ரேஷன் கடை கட்ட ரூ.12 லட்சத்து 30 ஆயிரத்தை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து அசோகன் எம்.எல்.ஏ. ஒதுக்கி உள்ளார். இதற்கான பூமி பூஜை நேற்று காலை நடைபெற்றது. இதில் அசோகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இதில் மேயர் சங்கீதா இன்பம், துணை மேயர் விக்னேஷ்பிரியா காளிராஜன், வார்டு கவுன்சிலர் பாக்கியலட்சுமி மற்றும் அதிகாரிகள், பொதுமக்கள், தி.மு.க., காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர். இதேபோல் மாநகராட்சியின் 43-வது வார்டு பகுதியில் பெண்கள் சுகாதார வளாகம் கட்ட ரூ.22 லட்சம் நிதியினை அசோகன் எம்.எல்.ஏ. ஒதுக்கி உள்ளார். இதற்கான பூமிபூஜையும் நடைபெற்றது. இதில் அந்த வார்டு உறுப்பினர் ரவிசங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story