பஞ்சாயத்து செயலகம் கட்ட பூமிபூஜை


பஞ்சாயத்து செயலகம் கட்ட பூமிபூஜை
x

செருமாக்கநல்லூர் ஊராட்சியில் பஞ்சாயத்து செயலகம் கட்ட பூமிபூஜை நடந்தது.

தஞ்சாவூர்

மெலட்டூர்:

அம்மாப்பேட்டை ஒன்றியம், செருமாக்கநல்லூர் ஊராட்சியில்ஊராட்சி நிதி மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத் திட்டம் நிதியில் இருந்து ரூ.43 லட்சத்தில் புதிய பஞ்சாயத்து செயலகம் கட்ட பூமிபூஜை நடந்தது. நிகழ்ச்சிக்கு செருமாக்கநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். அம்மாப்பேட்டை ஒன்றியக்குழு தலைவர் கே.வீ.கலைச்செல்வன், துணைத்தலைவர் தங்கமணி சுரேஷ்குமார் ஆகியோர் கலந்துகொண்டு பூமிபூஜை செய்து கட்டுமானப்பணியை தொடங்கி வைத்தனர்.இதில் மாவட்ட கவுன்சிலர் ராதிகா கோபிநாத், ஒன்றிய கவுன்சிலர் செல்வம், பெருமாக்கநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் ராமநாதன், ஒன்றிய பொறியாளர் கார்த்திகேயன், ஒப்பந்ததாரர் சண்.சரவணன், ஊராட்சி செயலாளர் அம்பிகா மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள். கிராமமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story