ரூ.15 லட்சத்தில் பயணிகள் நிழற்கூடம் அமைக்க பூமி பூஜை


ரூ.15 லட்சத்தில் பயணிகள் நிழற்கூடம் அமைக்க பூமி பூஜை
x

ரூ.15 லட்சத்தில் பயணிகள் நிழற்கூடம் அமைக்க பூமி பூஜையை தேவராஜ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

திருப்பத்தூர்

கந்திலி ஒன்றியம் கெஜல்நாயக்கன்பட்டி பகுதியில் பயணிகள் நிழற் கூடம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்று ஜோலார்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தேவராஜி எம்.எல்.ஏ. ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கினார். அதைத்தொடர்ந்து நிழற்கூடம் அமைப்பதற்கான பூமி பூஜை நடந்தது.

கெஜல்நாயக்கன்பட்டி பஸ் நிறுத்தத்தில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு கந்திலி தெற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.கே.டி.அசோக்குமார் தலைமை வகித்தார். முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் கு. ராஜமாணிக்கம் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் துரை வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக க.தேவராஜி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமி பூஜை போட்டு பணிகளை தொடங்கி வைத்து பேசினார்.

நிகழ்ச்சியில் அவைத்தலைவர் துரைசாமி, ஒன்றிய கவுன்சிலர் லீனா அசோக்குமார், ஊராட்சி மன்ற தலைவர் நந்தினி சரவணன், காதர் பாட்ஷா, சவுந்தர்ராஜன், நாகராஜ் சாந்தசீலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

-


Next Story