ரூ.4 கோடியில் தார்சாலை அமைக்க பூமிபூஜை


ரூ.4 கோடியில் தார்சாலை அமைக்க பூமிபூஜை
x
தினத்தந்தி 24 Nov 2022 12:15 AM IST (Updated: 24 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

குத்தாலம் அருகே ரூ.4 கோடியில் தார்சாலை அமைப்பதற்கான பூமிபூஜை நடந்தது. இதில் நிவேதா முருகன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டனர்.

மயிலாடுதுறை

குத்தாலம்:

குத்தாலம் அருகே ரூ.4 கோடியில் தார்சாலை அமைப்பதற்கான பூமிபூஜை நடந்தது. இதில் நிவேதா முருகன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டனர்.

பூமிபூஜை

குத்தாலம் ஒன்றியம் கோனேரிராஜபுரம் ஊராட்சிக்குட்பட்ட வைகல் கிராமத்தில் கோனேரிராஜபுரம், சிவனாகரம், பழஞ்சியநல்லூர், வைகல் உள்ளிட்ட 4 கிராமத்திற்கு செல்லும் 6 கிலோமீட்டர் தார்சாலை கடந்த 10 ஆண்டுகளாக குண்டும், குழியுமாக கிடந்தது. இந்த பகுதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று ரூ. 4 கோடியே 11 லட்சத்து 42 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நடந்தது. நிகழ்ச்சிக்கு கோனேரிராஜபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சித்ராவிஜயகுமார் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு தலைவர் மகேந்திரன், துணை தலைவர் முருகப்பா, குத்தாலம் தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நிவேதா முருகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு புதிய தார் சாலை அமைப்பதற்கான பணியை தொடங்கி வைத்து பூமி பூஜை செய்தார். இதில் செம்பை தெற்கு ஒன்றிய செயலாளர் அப்துல் மாலிக், ஒன்றிய குழு உறுப்பினர் சிவக்குமார், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் அமுதா மதியழகன், உதவி பொறியாளர் பிரதீஸ்குமார், ஒப்பந்தக்காரர் வீராசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பகுதி நேர ரேஷன் கடை திறப்பு

குத்தாலம் ஒன்றியம் கங்காதரபுரம் ஊராட்சி திருமங்கலம் கிராமத்தில் பகுதி நேர ரேஷன் கடை திறப்பு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு கங்காதரபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ராதிகா பாஸ்கரன் தலைமை தாங்கினார். குத்தாலம் ஒன்றியக்குழு தலைவர் மகேந்திரன், துணைத்தலைவர் முருகப்பா, மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் எழுமகளூர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நிவேதா முருகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பகுதி நேர ரேஷன் கடையை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து பேசினார். இதில் ஒன்றிய கவுன்சிலர்கள் சிவஞான சுந்தரி பாலு, கண்ணன், ஊராட்சி மன்ற தலைவர்கள் வெண்ணிலா ராஜ்குமார், சசிகலா திருமுருகன், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மனோகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story