துவரங்குறிச்சியில் பூதநாயகி அம்மன் கோவில் பொன்னூஞ்சல் நிகழ்ச்சி


துவரங்குறிச்சியில் பூதநாயகி அம்மன் கோவில் பொன்னூஞ்சல் நிகழ்ச்சி
x

துவரங்குறிச்சியில் பூதநாயகி அம்மன் கோவில் பொன்னூஞ்சல் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருச்சி

துவரங்குறிச்சியில் பழைமையான பூதநாயகி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் புரட்டாசி திருவிழா கடந்த மாதம் 20-ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி செட்டியாகுளத்தில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும், அக்னி சட்டி எடுத்தும் துவரங்குறிச்சி கடைவீதி வழியாக ஊர்வலமாக பூதநாயகி அம்மன் கோவில் வந்தடைந்தனர். இதே போல் கோவில் முன்பு பொங்கல் வைத்தல், கிடா வெட்டுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான நேற்று முன்தினம் இரவு பொன்னூஞ்சல் நிகழ்ச்சி நடைபெற்றது. பூதநாயகி அம்மன் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் முக்கிய வீதிகளின் வழியாக வீதி உலா வந்தார். பின்னர் அதிகாலை சாமி புறப்பாடு தொடங்கி மீண்டும் கோவிலை வந்தடைந்தது. இந்த நிகழ்ச்சியில் திரளானோர் கலந்து கொண்டனர். விழாவையொட்டி திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் மேற் பார்வையில் துணை போலீஸ் சூப்பிரண்டு குத்தாலிங்கம் மற்றும் பால்வண்ணன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story