திருவாரூரில், பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள் போட்டி
அண்ணா பிறந்தநாளையொட்டி திருவாரூரில், பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள் போட்டியை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
அண்ணா பிறந்தநாளையொட்டி திருவாரூரில், பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள் போட்டியை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
சைக்கிள் போட்டி
முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா பிறந்த நாளை கொண்டாடும் வகையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திருவாரூர் மாவட்ட விளையாட்டு பிரிவின் சார்பில் பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு அண்ணா சைக்கிள் போட்டி திருவாரூர் நகராட்சி அலுவலகத்தில் தொடங்கியது.
இந்த போட்டியை மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 13 வயது, 15 வயது மற்றும் 17 வயது மாணவ-மாணவிகளுக்கு போட்டிகள் நடத்தப்பட்டது. இப்போட்டியில் 30 பள்ளிகளில் இருந்து 225 மாணவிகள், 350 மாணவர்கள் என மொத்தம் 575 பேர் கலந்து கொண்டனர்.
பரிசு-சான்றிதழ்
சைக்கிளில் போட்டி தெற்கு வீதியில் இருந்து புறப்பட்டு கீழவீதி, வடக்குவீதி, மேல வீதி வழியாக நகராட்சி அலுவலகம் எதிரில் நிறைவு பெற்றது.போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.3 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.2 ஆயிரம், 4 முதல் 10 இடங்களில் வந்தவர்களுக்கு ரூ.250 மற்றும் சான்றிதழ்களை மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம் வழங்கினார்.
இதில் நகரசபை தலைவர் புவனப்பிரியா செந்தில், உதவி கலெக்டர் சங்கீதா, முன்னாள் நகரசபை துணைத்தலைவர் செந்தில், நகரசபை உறுப்பினர் பிரகாஷ், தாசில்தார் நக்கீரன், மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகுவேந்தன், நகராட்சிஆணையர் பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.