இருசக்கர வாகன பழுது பார்ப்போர் சங்க கூட்டம்
சிதம்பரத்தில் இருசக்கர வாகன பழுது பார்ப்போர் சங்க கூட்டம் நடந்தது.
சிதம்பரம்:
சிதம்பரத்தில் இருசக்கர வாகன பழுது பார்ப்போர் முன்னேற்ற நல சங்கத்தின் 15-ம் ஆண்டு தொடக்க விழா நடந்தது. விழாவுக்கு சிதம்பரம் தலைவர் ஏ.முருகதாஸ் தலைமை தாங்கினார். செயலாளர் ஏ.முரளி, பொருளாளர் ஜி.ரவீந்தர், துணை தலைவர் அண்ணாதுரை, துணை செயலாளர் அருண்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் ஜானகிராமன், மாநில பொதுச்செயலாளர் சக்தி, மாநில பொருளாளர் திருநாவுக்கரசு, மாநில பொறுப்பாளர்கள் பகவதிகுமார், மோகன், இளங்கோ, பகாபூர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இதில் இருசக்கர வாகன பழுது பார்ப்போர் முன்னேற்ற நல சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், கதிரவன், சுரேஷ், ராஜேஷ், தேவதாஸ் சுரேஷ்குமார், நடராஜன் சரவணன், மகேஷ், முத்து ஆகியோருக்கு உறுப்பினர் அடையாள அட்டையும், விபத்து காப்பீடும் செய்யப்பட்டது. விபத்தில் காயமடைந்த பாபுவுக்கு நிதி உதவி அளிக்கப்பட்டது.
விழாவில், இருசக்கர வாகன பழுது பார்ப்போர் முன்னேற்ற நல சங்கத்திற்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும், விபத்து காப்பீடு திட்டத்தில் உதவி, அரசு செலவில் வீடு கட்டி தர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் ராஜேஷ் நன்றி கூறினார்.