இருசக்கர வாகனம் திருட்டு
சிவகாசியில் இரு சக்கர வாகனம் திருட்டு போனது.
விருதுநகர்
சிவகாசி,
சிவகாசி பிச்சாண்டி தெருவை சேர்ந்தவர் விஜய்பாண்டியன் (வயது 27). இவர் அதே பகுதியில் இயங்கி வரும் பேப்பர் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு நிறுவனம் சார்பில் இருசக்கர வாகனம் வழங்கப்பட்டிருந்தது. இதனை விஜய்பாண்டியன் அலுவலக வேலைக்கு பயன்படுத்தி வந்தார். இரவு நேரங்களில் வீட்டின் அருகில் நிறுத்தி வைப்பது வழக்கம். இந்த நிலையில் சம்பவத்தன்று விஜய்பாண்டியன் தான் பயன்படுத்தி வந்த இருசக்கர வாகனத்தை வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். மறுநாள் காலையில் அந்த வாகனம் மாயமாகி இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த விஜய் பாண்டியன் சிவகாசி கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story