ஊராட்சி துணை தலைவர் வீட்டில் சைக்கிள் திருட்டு


ஊராட்சி துணை தலைவர் வீட்டில் சைக்கிள் திருட்டு
x

ஊராட்சி துணை தலைவர் வீட்டில் சைக்கிள் திருட்டு

கன்னியாகுமரி

கொல்லங்கோடு:

நித்திரவிளை அருகே உள்ள விரிவிளை பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் போஸ். இவர் வாவறை ஊராட்சி துணைத்தலைவராக இருந்து வருகிறார். நேற்று முன்தினம் இவரது வீட்டு வளாகத்தில் சைக்கிளை நிறுத்தியிருந்தார். அந்த சைக்கிள் திடீரென மாயமானது. இதையடுத்து அருகில் ஒரு வீட்டில் பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது, அதில் ஒரு போதை ஆசாமி ராஜேஷ் போசின் வீட்டின் கேட் திறந்து கிடப்பதை கண்டு உள்ளே புகுந்து வளாகத்தில் நிறுத்திருந்த சைக்கிளை திருடிச் செல்வதும், அப்போது போதையில் 3 முறை கீழே விழுந்து தடுமாறி சைக்கிளுடன் செல்வதும் பதிவாகி இருந்தது. இதுகுறித்து ராஜேஷ் போஸ் கொடுத்த புகாரின் பேரில் நித்திரவிளை போலீசில் புகார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி மர்ம நபரை தேடி வருகிறார்கள். இதற்கிடையே இந்த காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


Next Story