பிடாரி அம்மன் கோவில் பூந்தேர் திருவிழா


பிடாரி அம்மன் கோவில் பூந்தேர் திருவிழா
x

பிடாரி அம்மன் கோவில் பூந்தேர் திருவிழா நடந்தது.

திருச்சி

மணிகண்டம்:

மணிகண்டம் ஒன்றியம், முடிகண்டத்தில் உள்ள பிடாரி அம்மன் மற்றும் காளியம்மன் கோவில் திருவிழா கடந்த 2-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து தினமும் மாலை மற்றும் இரவு நேரத்தில் அபிஷேக, ஆராதனை நடைபெற்று வந்தது. கடந்த 16-ந் தேதி இரவு கோவிலில் திரளான பெண்கள் கூடி, பொங்கல் வைத்து வழிபட்டனர். இதைத்தொடர்ந்து அம்மனுக்கு அதிர்ேவட்டுகள், மேளதாளம் முழங்க சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இரவில் பிடாரி அம்மனுக்கு கிடாவெட்டு பூஜையும், நேற்று முன்தினம் காலை காளியம்மனுக்கு கிடா வெட்டு பூஜையும் நடைபெற்றது. இரவில் பிடாரியம்மன் பூந்தேர் ஊர்வலம் நடைபெற்றது. விழாவின் தொடர்ச்சியாக நேற்று மாலை காளியம்மன் கோவில் திடலில் காளியம்மன் உற்சவர் பொருத்தப்பட்ட பூந்தேர் வீதி உலா நடைபெற்றது. அப்போது பக்தர்கள், பொதுமக்கள் பூந்தேரின் மீது மஞ்சள் நீரை தெளித்து அம்மனை வழிபட்டனர். இன்று(வெள்ளிக்கிழமை) காலை சாமி குடிபுகுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவில் முடிகண்டம், கோலார்பட்டி, திருச்சி, ஓலையூர், மேக்குடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை நாட்டாமை சண்முகம் தலைமையிலான பட்டியதாரர்கள் மற்றும் முடிகண்டம், கோலார்பட்டி கிராம மக்கள் செய்திருந்தனர்.


Next Story