பீகார் விஷ சாராய குடித்து பலியானவர்கள் எண்ணிக்கை 26 ஆக உயர்வு
பீகாரில் 2016-ம் ஆண்டு நிதிஷ்குமார் அரசு மதுவிலக்கை அமல்படுத்தியது
பாட்னா,
பீகாரில் 2016-ம் ஆண்டு நிதிஷ்குமார் அரசு மதுவிலக்கை அமல்படுத்தியது. அப்போது முதல் அங்கு திருட்டுத்தனமாக சாராயம் காய்ச்சி விற்பனை செய்வது நடந்து வருகிறது. அதனால் உயிர்ப்பலிகளும் ஏற்பட்டு வருகின்றனஓராண்டுக்கு முன்பு, விஷ சாராயம் குடித்து 50-க்கும் மேற்பட்டவர்கள் பலியானது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
தற்போது பீகாரின் கிழக்கு சம்பரான் மாவட்டத்தில் மீண்டும் ஒரு விஷ சாராய உயிரிழப்பு சம்பவம் அரங்கேறி உள்ளது. 2 தினங்களுக்கு முன்பு இங்குள்ள லட்சுமிபூர், முசார் தோலி பகுதியில் பலர் வாந்தி-பேதி மற்றும் மயக்கம் அடைந்து அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் பலர் உயிரிழந்தனர். அவர்களின் சாவுக்கு விஷ சாராயம் அருந்தியதுதான் காரணம் என்று தெரியவந்தது.
நேற்று முன்தினம் பிற்பகல் வரை கிடைத்த தகவலில் 12 பேர் பலியாகி இருந்தனர். இந்த நிலையில் நேற்று பலி எண்ணிக்கை 26 ஆக உயர்ந்து அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. மேலும் 20-க்கும் மேற்பட்டோர் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.இதையடுத்து கள்ளச்சாராய விவகாரம் மீண்டும் பூதாகரமாகி உள்ளது. பீகாரில் 2016-ம் ஆண்டு நிதிஷ்குமார் அரசு மதுவிலக்கை அமல்படுத்தியதுகள்ளச்சாராய புழக்கத்தை தடுக்கத் தவறியதாக 5 போலீஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். 11 காவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை பாய்ந்துள்ளது.