இருதரப்பினர் மோதல்; 2 பேர் கைது
முன்விரோதம் காரணமாக இருதரப்பினர் மோதல்; 2 பேர் கைது
திண்டிவனம்
திண்டிவனத்தை அடுத்த ஓங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 24). இவரது தந்தை விநாயகத்துக்கும், பெரியப்பா ரங்கசாமி(76) என்பவருக்கும் இடையே வீட்டுமனை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று பிரச்சினைக்குரிய வீட்டு மனையில் ரங்கசாமியின் மகன்களான முருகதாஸ்(37), பழனிவேல்(39), சிலம்பரசன்(30) ஆகியோர் பள்ளம் தோண்டி கொட்டகை போட்டதை மணிகண்டன் தட்டிக்கேட்டார். இதில் ஆத்திரமடைந்த அவர்கள் மணிகண்டன், இவரது தந்தை விநாயகம் ஆகியோரை தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் இது குறித்து இரு தரப்பினரும் ஒலக்கூர் போலீஸ் நிலையத்தில் தனித்தனியாக புகார் கொடுத்தனர். இதில் மணிகண்டன் தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் ரங்கசாமி, பழனிவேல், முருகதாஸ், சிலம்பரசன் ஆகிய 4 பேர் மீதும், முருகதாஸ் கொடுத்த புகாரின் பேரில் விநாயகம், ஜோதிலிங்கம்(27), மணிகண்டன், ஸ்ரீராமன்(35) ஆகிய 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் முருகதாஸ், ஜோதிலிங்கம் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.