தக்கலையில் இருதரப்பினர் மோதல்; மதபோதகர் உள்பட 2 பேர் காயம்
தக்கலையில் இருதரப்பினர் மோதிக் கொண்டதில் மதபோதகர் உள்பட 2 பேர் காயம் அடைந்தனர்.
தக்கலை,
தக்கலையில் இருதரப்பினர் மோதிக் கொண்டதில் மதபோதகர் உள்பட 2 பேர் காயம் அடைந்தனர்.
மோதல்
தக்கலையில் உள்ள பத்மநாபபுரம் அரண்மனைக்கு செல்லும் சாலையில் சம்பவத்தன்று மாலை 4 மணிக்கு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த வழியாக காரில் வந்த மேக்காமண்டபத்தை சேர்ந்த மதபோதகர் ஸ்பர்ஜன் (வயது 42) என்பவருக்கும், அங்கு வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணம் வசூல் செய்யும் வின்சென்ட் சர்ச்சில் (22) என்பவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
பின்னர் காரில் இருந்தவர்களுக்கும், அப்பகுதியில் வியாபாரம் செய்தவர்களுக்கும் இடையேயும் வாக்குவாதம் முற்றியது. தொடர்ந்து இருதரப்பினராக பிரிந்து மோதிக் கொண்டனர். இதில் ஸ்பர்ஜன், வின்சென்ட் சர்ச்சில் ஆகிய 2 பேருக்கு காயம் ஏற்பட்டது. மேலும் இ்ந்த சம்பவம் தொடர்பாக இருதரப்பினரும் அளித்த புகாரின் பேரில் இரு தரப்பை சேர்ந்த 7 பேர் மீது தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.