இருதரப்பினர் மோதல்; 6 பேர் மீது வழக்கு
இரு தரப்பினர் மோதிக்கொண்டதில் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஓமலூர்:-
ஓமலூர் அடுத்த ஊமகவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் அய்யந்துரை. இவருடைய மகன் ராம்குமார் (வயது 22). சேலத்தில் உள்ள தனியார் கார் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். புத்தாண்டையொட்டி 31-ந்தேதி இரவு ஊம கவுண்டம்பட்டி அய்யனாரப்பன் கோவில் அருகே ராம்குமார் மற்றும் அதே பகுதியை சேர்ந்த ரமணா, பெரியசாமி, விக்ரம் ஆகியோர் மது குடித்துக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது அவர்களுக்கு அருகே தாத்தியம்பட்டி பகுதியை சேர்ந்த ராஜி என்பவர் மகன் திலீப் குமார், தினேஷ், மோகன், சதீஷ் ஆகியோரும் மது குடித்துக்கொண்டு இருந்துள்ளனர்.
அப்போது அவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் காயமடைந்த ராம்குமார் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அதேபோல் இந்த தகராறில் காயமடைந்த தீலிப்குமார், காமலாபுரம் பிரிவு ரோடு அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். சம்பவம் குறித்து இருதரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் தீவட்டிப்பட்டி போலீசார் இருதரப்பை சேர்ந்த 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.