இரு தரப்பினர் மோதல்; 8 பேர் மீது வழக்கு


இரு தரப்பினர் மோதல்; 8 பேர் மீது வழக்கு
x

இரு தரப்பினர் மோதல்; 8 பேர் மீது வழக்கு

கன்னியாகுமரி

திருவட்டார்:

திருவட்டார் அருகே புல்லன்விளை கல்லம்குட்டி பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (வயது 60), தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிசில்குமார் (30), சிங் (36), செல்லசாமி (60) ஆகியோருக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று சுந்தர்ராஜ் மற்றும் அவரது தம்பி லாரன்ஸ் ஆகிய 2 பேரும் அந்த பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த சிசில்குமார், சிங், செல்லசாமி ஆகிய 3 பேரும் சேர்ந்து சுந்தர்ராஜை தடுத்து நிறுத்தி தகாத வார்த்தையால் பேசி தகராறு செய்தனர். அப்போது இருதரப்பினரும் மோதிக்கொண்டனர். இதில் சிசில்குமார் தரப்பினர் கத்தி மற்றும் கட்டையால் தாக்கியதில் சுந்தர்ராஜூக்கு தலையில் காயமும், லாரன்சுக்கு கையில் வெட்டுக்காயமும் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த சுந்தர்ராஜ், லாரன்ஸ் ஆகிய 2 பேரும் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியிலும், சிசில்குமார், சிங் ஆகிய 2 பேரும் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதுபற்றி சுந்தர்ராஜ் கொடுத்த புகாரின் பேரில் சிசில்ராஜ், சிங், செல்லசாமி ஆகிய 3 பேர் மீது திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதேபோல் சிசில்குமார் கொடுத்த புகாரின் பேரில் சுந்தர்ராஜ், லாரன்ஸ் மற்றும் உறவினர்களான ஜோஸ் (36), பால்துரை (54), முத்தையன் (60) ஆகிய 5 ேபர் மீது போலீசார் வழக்குப்பகுதிவு செய்தனர்.


Next Story