சொத்துவரி, குடிநீர் கட்டணத்தை உடனே செலுத்த வேண்டும்


சொத்துவரி, குடிநீர் கட்டணத்தை உடனே செலுத்த வேண்டும்
x

சொத்துவரி, குடிநீர் கட்டணத்தை உடனே செலுத்த வேண்டும் என்று ஆணையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

ராமேசுவரம் நகராட்சியில் சொத்துவரி சீராய்வு 2022 பணியானது நிறைவு பெற்று புதியதாக காலிமனை வரி மற்றும் புதிதாக சொத்து வரி விதிப்பதற்கு வழிவகை ஏற்படுத்தப்பட்டு உள்ளது. எனவே ராமேசுவரம் நகராட்சி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு சொத்து வரி விதிப்புகள் மற்றும் காலி இடங்களுக்கு காலி இட வரிவிதிப்புகள் ஏற்படுத்த உரிய முறையில் ராமேசுவரம் நகராட்சி அலுவலகம் மற்றும் http://tnurbanepay.tn.gov.in/என்ற வலைதளத்தில் விண்ணப்பித்து புதிய வரி விதிப்பிற்கான ரசீதுகளை பெற்றுக் கொள்ளலாம் எனவும் ராமேசுவரம் நகர பொதுமக்கள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய நிலுவை மற்றும் நடப்பு சொத்து வரி, காலிமனை வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணங்களை உடனடியாக செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணம் உள்ளிட்ட வரிகளை சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக நகராட்சி அலுவலகத்தில் செலுத்த வேண்டும். இந்த தகவலை ராமேசுவரம் நகராட்சி ஆணையாளர் கண்ணன் தெரிவித்துள்ளார்.


Next Story