ராமேஸ்வரம் கோவிலில் உண்டியல் பணம் எண்ணும் பணி தீவிரம்


ராமேஸ்வரம் கோவிலில் உண்டியல் பணம் எண்ணும் பணி தீவிரம்
x

ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் பணம் எண்ணப்பட்டு வருகின்றது.

ராமேஸ்வரம்:

அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக கருதப்படும் ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் பணம் திறந்து எண்ணப்பட்டு வருகின்றது.

இந்த உண்டியல் எண்ணும் பணி இன்று இரவுக்குள் முழுமையாக முடிந்து அதன் பின்னர் உண்டியலில் கிடைத்துள்ள வருமானம் எவ்வளவு என்பது திருக்கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்படும்.

உண்டியல் எண்ணும் பணியில் திருக்கோவில் பணியாளர்கள் மற்றும் ஏராளமான சமூக ஆர்வலர்களும் ஈடுபட்டுள்ளனர்.


Next Story