உண்டியல் காணிக்கை எண்ணும் பணி


உண்டியல் காணிக்கை எண்ணும் பணி
x
தினத்தந்தி 23 Sept 2022 12:15 AM IST (Updated: 23 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது.

சிவகங்கை

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி வேங்கைபட்டி சாலையில் உள்ள பிரசித்தி பெற்ற சித்தர் முத்து வடுகநாதர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள். கோவில் உண்டியல் 3 மாதத்திற்கு ஒருமுறை திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்படுவது வழக்கம். அதன்படி நேற்று உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டன. நிகழ்ச்சிக்கு இந்துசமய அறநிலை துறை ஆய்வாளர் சுகன்யா, செயல் அலுவலர் பாலாஜி ஆகியோர் தலைமையில் உண்டியல் திறக்கப்பட்டது.

சிங்கம்புணரி வணிக நல சங்கத்தின் தலைவர் வாசு, துணைத் தலைவர் சரவணன், பொருளாளர் சிவக்குமார், இணை செயலாளர் திருமாறன், செயலாளர் வீரபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர். மொத்தம் ரூ.2 லட்சத்து 7 ஆயிரத்து 739 காணிக்கையாக இருந்தது.



Next Story