உயிரி எரிவாயு தயாரிக்கும் திட்டம் மீண்டும் தொடங்கியது


உயிரி எரிவாயு தயாரிக்கும் திட்டம் மீண்டும் தொடங்கியது
x

திருச்செங்கோடு நகராட்சியில் உயிரி எரிவாயு தயாரிக்கும் திட்டம் மீண்டும் தொடங்கியது.

நாமக்கல்

எலச்சிபாளையம்:

திருச்செங்கோடு நகராட்சியில் உருவாகும் உயிரி குப்பைகளை கொண்டு எரிவாயு தயாரிக்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த எரிவாயு கலனில் ஏற்பட்ட பழுதால் எரிவாயு உற்பத்தி நிறுத்தப்பட்டு இருந்தது. எனவே எரிவாயு திட்டத்தை மீண்டும் தொடங்க முடிவு செய்யப்பட்டு 15-வது நிதிக்குழு மானியத்தில் சுமார் ரூ.7 லட்சம் ஒதுக்கி பழுது சரிசெய்யப்பட்டது. அணிமூர் உரக்கிடங்கில் தற்போது கிடைத்து வரும் 3 டன் காய்கறி மற்றும் உணவு கழிவுகளில் இருந்து மீத்தேன் வாயு உற்பத்தி பணி தொடங்கியது. இதனை நகராட்சி தலைவர் நளினி சுரேஷ்பாபு, மண்டல முதன்மை பொறியாளர் ராஜேந்திரன் ஆகியோர் ஆய்வு செய்தனர். ஆய்வின் போது நகராட்சி ஆணையாளர் கணேசன், பொறியாளர் சண்முகம், நகர்நல அலுவலர் மணிவேல், துப்புரவு அலுவலர் வெங்கடேசன், ஒன்றிய குழு துணைத்தலைவர் ராஜவேல், அணிமூர் பங்சாயத்து தலைவர் தாமரை செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story