சுதந்திர போராட்ட தியாகி விசுவநாததாஸ் பிறந்தநாள் விழா
தூத்துக்குடியில் சுதந்திர போராட்ட தியாகி விசுவநாததாஸ் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்ட முடிதிருத்தும் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் விடுதலை போராட்ட தியாகி விசுவநாததாஸ் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு மாவட்ட தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மனோகரன், துணைத்தலைவர் ராஜ், துணை செயலாளர் நல்லதம்பி, பொருளாளர் சித்திரைவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநகராட்சி கவுன்சிலர் இசக்கி கலந்து கொண்டு, அலங்கரித்து வைக்கப்பட்ட தியாகி விசுவநாததாஸ் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் தி.மு.க. வட்ட செயலாளர் சுரேஷ் மற்றும் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story