பிரியாணி மாஸ்டர் நீரில் மூழ்கி பலி


பிரியாணி மாஸ்டர் நீரில் மூழ்கி பலி
x
தினத்தந்தி 5 April 2023 12:15 AM IST (Updated: 5 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

பிரியாணி மாஸ்டர் நீரில் மூழ்கி பலியானார்.

ராணிப்பேட்டை

அரக்கோணம்

பிரியாணி மாஸ்டர் நீரில் மூழ்கி பலியானார்.

அரக்கோணத்தை அடுத்த அன்வர்திகான்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஜமீல் பாஷா (வயது 40). பிரியாணி மாஸ்டர். நேற்று முன்தினம் மாலை அந்த பகுதியில் உள்ள குட்டையில் மீன் பிடிக்க சென்றதாக கூறப்படுகிறது. இரவு நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை.

நேற்று விடியற்காலை ஜமீல்பாஷாவை தேடி அவரது மகன் சென்றபோது குட்டையில் மூழ்கி இறந்து கிடந்தது தெரியவந்தது. இது குறித்து அரக்கோணம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்ட போது ஜமீல்பாஷாவிற்கு நீச்சல் தெரியாததால் மீன் பிடிக்கும் போது தவறி விழுந்து நீரில் மூழ்கி பலியானது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story