பிரியாணி மாஸ்டர் தூக்குப்போட்டு தற்கொலை


பிரியாணி மாஸ்டர் தூக்குப்போட்டு தற்கொலை
x

தொரப்பாடியில் பிரியாணி மாஸ்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

வேலூர்

தொரப்பாடி ராம்சேட் நகரை சேர்ந்தவர் நியாஸ் (வயது 26). பிரியாணி மாஸ்டர். இவரது மனைவி சல்மா (26). நியாசுக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்தநிலையில் நியாஸ் மது குடித்து போதையில் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அவருக்கும் மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. விரக்தியடைந்த நியாஸ், வீட்டுக்குள் சென்று கதவை மூடிக்கொண்டார்.

இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் ஓடிச் சென்று கதவை திறக்குமாறு நியாசிடம் தெரிவித்தனர். அவர் திறக்கவில்லை. பின்னர் கதவை உடைத்து அவர்கள் சென்றபோது நியாஸ் தூக்கில் தொங்கினார். அவரை அவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது நியாஸ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து பாகாயம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story