மின்வேலியில் சிக்கி காட்டெருமை செத்தது


மின்வேலியில் சிக்கி காட்டெருமை செத்தது
x

அரூர் அருகே மின்வேலியில் சிக்கி காட்டெருமை செத்தது.

தர்மபுரி

அரூர்

அரூர் அருகே சித்தேரி பூமரத்து கொட்டாய் பகுதியை சேர்ந்தவர்கள் ராமச்சந்திரன் என்ற சுந்தரம், சக்திவேல், சின்னராமன். விவசாயிகள். இவர்களது நிலத்தில் காட்டுப்பன்றிகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்தது. இதை தடுக்க நிலத்தில் அவர்கள் மின் வேலி அமைத்து இருந்தனர். இதில் வனப்பகுதியில் இருந்து வந்த காட்டெருமை சிக்கி உயிரிழந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரும் குழி தோண்டி காட்டெருமையை புதைத்துவிட்டனர். இதுகுறித்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து ராமச்சந்திரன், சக்திவேல், சின்னராமன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.


Next Story