பழனி அருகே தோட்டங்களுக்குள் புகுந்து காட்டெருைம, காட்டுப்பன்றிகள் அட்டகாசம்


பழனி அருகே தோட்டங்களுக்குள் புகுந்து காட்டெருைம, காட்டுப்பன்றிகள் அட்டகாசம்
x
தினத்தந்தி 29 Jun 2023 2:30 AM IST (Updated: 29 Jun 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

பழனி அருகே தோட்டங்களுக்குள் புகுந்து காட்டெருைம, காட்டுப்பன்றிகள் அட்டகாசம் செய்து வருவதாக விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.

திண்டுக்கல்

பழனி அருகே தோட்டங்களுக்குள் புகுந்து காட்டெருைம, காட்டுப்பன்றிகள் அட்டகாசம் செய்து வருவதாக விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.

விவசாய தோட்டங்கள்

பழனி அருகே மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் சட்டப்பாறை, வரதாபட்டினம் ஆகிய பகுதிகள் உள்ளன. இங்குள்ள தோட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் மா, கொய்யா விவசாயம் நடைபெற்று வருகிறது. தற்போது சீசன் நிலவுவதால் தினமும் காலை, மாலையில் விவசாயிகள் மாங்காய், கொய்யாவை பறித்து ஆயக்குடி தினசரி சந்தைக்கு கொண்டு வருகின்றனர்.

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக சட்டப்பாறை பகுதியில் காட்டெருமை, காட்டுப்பன்றிகள் அட்டகாசம் அதிகமாக உள்ளது. குறிப்பாக தோட்ட பகுதியில் புகும் அவை பயிர்களை சேதப்படுத்தி செல்கிறது. அதோடு காலை, மாலையில் தோட்ட பகுதியில் காட்டெருமை, காட்டுப்பன்றிகள் உலா வருவதால் கொய்யா, மா பறிக்க வரும் தொழிலாளிகள், விவசாயிகள் அச்சம் அடைந்து உள்ளனர்.

காட்டெருமை உலா

கடந்த சில நாட்களுக்கு முன்பு சட்டப்பாறை பகுதியில் தோட்டத்தில் நின்று கொண்டிருந்த கனகராஜ் என்ற விவசாயியை காட்டெருமை முட்டி தள்ளியது. இதில் படுகாயம் அடைந்த அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையே நேற்று சட்டப்பாறை பகுதியில் மாந்தோப்புக்குள் காட்டெருமை ஒன்று உலா வந்தது.

இதைக்கண்ட விவசாயிகள் தோட்ட பகுதிக்கு செல்ல அச்சப்பட்டு உள்ளனர். எனவே உயிருக்கு அச்சுறுத்தலாக ஆயக்குடி அருகே தோட்ட பகுதியில் உலா வரும் காட்டெருமை, காட்டுப்பன்றிகள் உள்ளிட்டவற்றை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.


Next Story