காட்டெருமைகள் உலா; போக்குவரத்து பாதிப்பு
கோத்தகிரி சாலையில் காட்டெருமைகள் உலா வந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
நீலகிரி
கோத்தகிரி,
கோத்தகிரி ராம்சந்த் சதுக்கம், 6 முக்கிய சாலைகள் சந்திக்கும் பகுதியாகும். இங்கு எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். இந்தநிலையில் நேற்று இரவில் குட்டியுடன் 8 காட்டெருமைகள் சாலையின் குறுக்கே முகாமிட்டன. அதில் காட்டெருமை ஒன்று குட்டிக்கு பால் கொடுத்தவாறு இருந்தது. இதனால் சாலைகளில் வந்த வாகனங்கள் அணிவகுத்து நின்றன. காட்டெருமைகள் இருசக்கர வாகன ஓட்டிகளின் அருகே தாக்குவதற்காக ஆக்ரோஷத்துடன் சென்றன. இதனால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். இதையடுத்து ரைபிள் ரேஞ்ச் செல்லும் சாலையில் நின்ற வாகனங்களை பொதுமக்கள் ஒதுக்கி, காட்டெருமைகள் செல்ல வழி ஏற்படுத்திக் கொடுத்தனர். இதையடுத்து காட்டெருமைகள் அங்கிருந்து சென்று அருகே இருந்த தேயிலைத் தோட்டத்திற்குள் சென்றன. இதனால் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story