பா.ஜ.க. பிரமுகர் உள்பட 2 பேர் கைது


பா.ஜ.க. பிரமுகர் உள்பட 2 பேர் கைது
x

டிராக்டர் டிரைலர் திருட்டு வழக்கில் பா.ஜ.க. பிரமுகர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர்-ராஜபாளையம் ரோட்டில் திருப்பாற்கடல் கண்மாயில் நடைபாதை அமைக்கும் பணி நகராட்சி சார்பில் நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக ராஜபாளையம் காண்ட்ராக்டர் ஒருவருக்கு சொந்தமான டிராக்டர் கொண்டு வரப்பட்டது. அப்போது டிரைவர் கணேசன் டிராக்டரை தனியாகவும், டிரைலரை தனியாகவும் நிறுத்தி விட்டு சென்றார். பின்னர் மறுநாள் வந்து பார்த்த போது டிரைலரை காணவில்லை. இதுகுறித்து கணேசன் அளித்த புகாரின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கடம்பன்குளத்தை சேர்ந்த கண்ணன் (வயது36), கருப்பசாமி (32) ஆகிய 2 பேரும் டிரைலரை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கண்ணன் விருதுநகர் மாவட்ட பா.ஜ.க.வின் அமைப்பு சாரா தொழிலாளர்களின் மாவட்ட செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



Related Tags :
Next Story