கீழ்பவானி பாசன கால்வாயில் பா.ஜ.க.வினர் ஆய்வு


கீழ்பவானி பாசன கால்வாயில்   பா.ஜ.க.வினர் ஆய்வு
x
திருப்பூர்


கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் கீழ்பவானி பாசன கால்வாய் கடைமடை பகுதியான திருப்பூர் மாவட்டம், முத்தூர் அருகே உள்ள மங்களப்பட்டி கிராமத்தில் பா.ஜ.க விவசாய அணி குழுவினர் நேற்று காலை நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டனர். இதன்படி பா.ஜ.க திருப்பூர் தெற்கு மாவட்ட விவசாய அணி மாவட்ட தலைவர் விவேகானந்தன் தலைமையில் விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே.நாகராஜ், வழக்கறிஞர் என்.பி.பழனிச்சாமி இயற்கை ஆர்வலர் செல்வகுமார், நீர் பாசன மேலாண்மை நிபுணர் எம்.பெரியசாமி, பொதுப்பணித்துறை முன்னாள் தலைமை பொறியாளர் ஆர்.இளங்கோவன் தலைமையில் ஆய்வு குழுவினர் மங்களப்பட்டி கிராமத்தில் உள்ள கீழ்பவானி பாசன பிரதான கால்வாயை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

தொடர்ந்து கீழ்பவானி பாசன விவசாயிகள் கூறிய கருத்துக்களை கேட்டு அறிந்து கொண்டு கால்வாயின் தற்போதைய நிலை, கால்வாயின் இருபுறமும் உள்ள மரங்கள், கிளை கால்வாயின் தற்போதைய நிலை, கால்வாய் நீரோட்டத்தில் உள்ள தடைகள் பற்றிய உண்மை நிலை குறித்த அறிக்கை தயார் செய்தனர். இந்த அறிக்கை மத்திய, மாநில அரசுகளிடம் வழங்கப்பட உள்ளது.இந்த நிகழ்ச்சியில் விவசாய அணி மாநில பொதுச் செயலாளர் டி.கவிதா, பொருளாளர் பார்த்தசாரதி, திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மங்களம் ரவி, மாவட்ட பொதுச் செயலாளர்கள் ஆனந்தகுமார், எஸ்.சிவபாலன் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்


Next Story