புஞ்சைபுளியம்பட்டிக்கு ஆ.ராசா எம்.பி. வருகையை கண்டித்து பா.ஜ.க. போராட்டம்
புஞ்சைபுளியம்பட்டிக்கு ஆ.ராசா எம்.பி. வருகையை கண்டித்து பா.ஜ.க. போராட்டம்
ஈரோடு
புஞ்சைபுளியம்பட்டி
புஞ்சைபுளியம்பட்டிக்கு நீலகிரி ஆ.ராசா எம்.பி. வருகையை கண்டித்து பாரதீய ஜனதா கட்சி சார்பில் ஆதிபராசக்தி கோவில் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதனைத் தொடர்ந்து மாவட்ட தலைவர் கலைவாணி விஜயகுமார் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் இந்துக்களை தவறாக பேசியதாக ஆ.ராசாவை கண்டித்து கோஷம் எழுப்பியபடி சத்தி-கோவை தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். உடனே போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்து அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைத்தார்கள்.
Related Tags :
Next Story