பெருந்துறையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய பா.ஜ.க.வினர் 97 பேர் கைது


பெருந்துறையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய பா.ஜ.க.வினர் 97 பேர் கைது
x

பெருந்துறையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய பா.ஜ.க.வினர் 97 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஈரோடு

பெருந்துறை

பெருந்துறையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய பா.ஜ.க.வினர் 97 பேர் கைது செய்யப்பட்டனர்.

திடீர் ஆர்ப்பாட்டம்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை பேரூராட்சியில் கடந்த 3 மாதங்களாக கவுன்சில் கூட்டம் நடக்கவில்லை. பேரூராட்சி தலைவருக்கும், 14 கவுன்சிலர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கவுன்சிலர்கள் அனைவரும் கூட்டத்தை புறக்கணித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் பெருந்துைற பேரூராட்சி கூட்டம் கடந்த 3 மாதங்களாக நடைபெறாததை கண்டித்து பா.ஜ.க.வினர் நேற்று மாலை திடீரென கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெருந்துறை பேரூராட்சி அலுவலகம் எதிரே செல்லும் ஈரோடு ரோட்டில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஈரோடு தெற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் வேதாந்தம் தலைமை தாங்கினார்.

கோஷமிட்டனர்

ஈரோடு மாவட்ட பா.ஜ.க. முன்னாள் தலைவர் இமயம் சந்திரசேகர், செயலாளர் டி.என்.ஆறுமுகம், பெருந்துறை நகர பா.ஜ.க. முன்னாள் தலைவர் கருடா விஜயகுமார், பெருந்துறை ஒன்றிய பா.ஜ.க. வக்கீல் பிரிவு தலைவர் பி.எம்.வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், ஈரோடு தெற்கு மாவட்ட பா.ஜ.க.செயலாளர் சரவணன், பெருந்துறை நகர தலைவர் பூர்ணசந்திரன், மாவட்ட மகளிர் அணி துணைத் தலைவர் மணிமேகலை, செயலாளர் சியாமளா கவுரி, வர்த்தக அணி முன்னாள் தலைவர் ஜெய்சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டு கோஷமிட்டனர்.

97 பேர் கைது

ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு பா.ஜ.க.வினர் போலீசில் உரிய அனுமதி பெறவில்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு இருந்த 9 பெண்கள் உள்பட 97 பேரை பெருந்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயபாலன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். அனைவரையும் வாகனத்தில் ஏற்றி பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.


Related Tags :
Next Story