பா.ஜ.க. பெண் நிர்வாகி வீட்டில் கொட்டகைகளை சேதப்படுத்திய வழக்கில் ஒருவர் கைது


பா.ஜ.க. பெண் நிர்வாகி வீட்டில் கொட்டகைகளை சேதப்படுத்திய வழக்கில் ஒருவர் கைது
x

பா.ஜ.க. பெண் நிர்வாகி வீட்டில் கொட்டகைகளை சேதப்படுத்திய வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அரியலூர்

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே வாரியங்காவல் நாகல்குழி ரோட்டு பகுதியை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (வயது 45). இவரது மனைவி பரமேஸ்வரி(35). இவர்கள் டாக்டர் ஆவார்கள். மேலும் பரமேஸ்வரி, அரியலூர் மாவட்ட பா.ஜ.க. மருத்துவ அணி தலைவராக உள்ளார். இந்நிலையில் இவர்கள் பாரம்பரிய மாடு இனத்தை மீட்க வீட்டில் கொட்டகை உள்ளிட்ட ஏற்பாடுகளை செய்திருந்தனர். இந்நிலையில் கோடை விடுமுறைக்காக அவர்கள் தங்கள் குழந்தைகளுடன் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றனர்.

இந்நிலையில் பரமேஸ்வரியின் பெரியப்பாவான அதே பகுதியை சேர்ந்த அண்ணாதுரை, அவரது மகன் ஹரிஹரசுதன் மற்றும் சம்பந்தி சுப்பிரமணியன் உள்ளிட்ட சிலர் டாக்டர் தம்பதி வீட்டின் கம்பி வேலி, ஆஸ்பெட்டாஸ் ஷீட்டுடன் கூடிய 2 கொட்டகைகள் உள்ளிட்டவற்றை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். இது குறித்து ஆனந்தராஜ் மற்றும் அவரது மாமனார் பாலசுப்பிரமணியன் ஆகியோர் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெகன்நாத் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இந்நிலையில் இந்த வழக்கில் சுப்பிரமணியனை போலீசார் கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.


Next Story